முழு அடைப்பு போராட்டம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் கைது 

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்துக்கு விவசாய, வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன.

ஒவ்வொரு கட்சியிலும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார்  கைது செய்தனர்.

இப்போராட்டம் இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 7100 பேர் கைது செய்யப்பட்டதாகவும், முழு அடைப்பு அமைதியாக நடந்து முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com