சுடச்சுட

  

  ஐ.பி.எல் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் புனே அணி  வெற்றி

  By DIN  |   Published on : 07th April 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  smith

  புனேவில் நடைபெறும் இன்றைய போட்டியில் ‘டாஸ்’ வென்ற புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணிக்கு பார்த்திவ் பட்டேல் மற்றும் ஜோஸ் பட்லர் துவக்கம் தந்தனர்.
  தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 19 ரன்கள் எடுத்தபோது பார்த்திவ் பட்டேல் இம்ரான் தாகீர் பந்துவீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார்.      20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ஆட்டத்தை தொடங்கிய புனே அணிக்கு அகர்வால் 6 ரன்களும், ரகானே சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 60 ரன்களை குவித்தார்.
  பின் களமிறங்கிய ஸ்மித் 54 பந்துகளில் 84 ரன்களையும் தோனி 12 ரன்களியும்  எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து புனே அணி சிறப்பான வெற்றி பெற்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai