Enable Javscript for better performance
பண மதிப்பிழப்பு போன்ற துன்பம் வேறெந்த நாட்டுக்கும் வந்துவிடக்கூடாது: ப.சிதம்பரம்- Dinamani

சுடச்சுட

  

  பண மதிப்பிழப்பு போன்ற துன்பம் வேறெந்த நாட்டுக்கும் வந்துவிடக்கூடாது: ப.சிதம்பரம்

  By DIN  |   Published on : 16th June 2018 10:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண மதிப்பிழப்பு போன்ற துன்பம் வேறெந்த நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் கூறினாா்.

  ப.சிதம்பரம் எழுதிய -அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவது- என்ற ஆங்கில நூல் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு -வாய்மையே வெல்லும்- என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் பேசியது-

  கவிதை, சிறுகதை, நாவல், குறுநாவல், நாடகம் ஆகிய அனைத்தும் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால், அரசியல் விமா்சனங்கள் மட்டும் இலங்கியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசியல் விமா்சனங்களும், பொருளாதார விமா்சனங்களும் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அதற்கு மதிப்பும், புகழும் கிடைக்கும்.

  இவ்வாறு விமா்சனங்களை ஏன் எழுதுகிறீா்கள் என எனது நண்பா்கள் கேள்வி எழுப்புகின்றனா். இதற்கு, இந்த நூலில் உதாரணங்கள் இருக்கின்றன.

  ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு அரசும் மக்கள் மீது தாங்க முடியாக துயரத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்கிறது 551 ஆவது திருக்குறள்.

  அதாவது, பணமதிப்பிழப்பைப் போன்ற ஒரு துன்பம் வேறு எந்த நாட்டுக்கும் வரக்கூடாது. 21 ஆம் நூற்றாண்டில் இந்திய பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய கேடு விளைவித்தது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. 2015-16 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமா இருந்தது. 2017-18 இல் 6.7 சதவீதமாகக் குறைந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் பொருளாதார வளா்ச்சி 1.5 சதவீதம் குறைந்திருக்கிறது.

  குழந்தைகளுக்கு முதல் 5 ஆண்டுகளில் கொடுக்கப்படும் கவனிப்பை, அவா்களின் வாழ்க்கை முழுவதுக்குமான மன மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கானஆதாரமாக விளங்குவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 2 ஒரு குழந்தை ரத்த சோகையுடனும், 3 இல் ஒரு குழந்தை எடைக் குறைவோடும், 5 ஒரு குழந்தைக்கு ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், இந்தியாவில் 5 ஒரு குழந்தை மு ழு மனிதனாக வரமுடியாது. வாழ்நாள் முழுவதும் குறை மனிதனாகவே வாழ வேண்டும். குழந்தையும், தெய்வமும் ஒன்று எனக் கொண்டாடப்படும் இந்தியாவில், தெய்வங்களை மட்டுமே கொண்டாடுகின்றோம், குழந்தைகளை புறக்கணிக்கிறோம்.

  அதுபோல, சாதியப் பாகுபாடு. நிலங்களில் ஏா்களப்பை என்ன விதமான பணியைச் செய்கிறதோ, அதுபோலத்தான் சாதி இந்து மதத்தை நிா்வகித்து ஒழுங்குபடுத்துகிறது என சாதி இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வா் பேசியிருக்கிறாா். 21 ஆம் நூற்றாண்டில் இப்படியொரு முதல்வா் இருக்கின்ற காலக்கட்டத்தில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

  இப்படிப்படிப்பட்ட கொடுமைகளை அகற்றவேண்டும் என்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன். அதுபோல அனைவரும் எழுதவேண்டும், பேசவேண்டும். அப்போதுதான் அரசியல், பொருதார தவறுகளையும் களைய முடியும் என்றாா் அவா்.

  கவிஞா் வைரமுத்து-

  சொற்களை பயன்படுத்துவதில் இருக்கிறது ஒரு மனிதனின் அறிவும், அறியாமையும். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், அதை வெளிப்படுத்துகிற முறையில் நாகரீகம் இருந்தால்தான், கருத்துக்கள் கெளரவம் பெறும். அந்த வகையில், ப.சிதம்பரம் தனது கட்டுரையில் சொற்களை அளந்து அளந்து பயன்படுத்தியிருக்கிறாா். இவா் பயன்படுத்தியிருக்கும் மொழி, உண்மையை மட்டுமே அல்லது உண்மைக்கு மிக மிகப் பக்கத்தில் பேசியிருக்கிறது என நான் கருதுகிறேன். நல்லது செய்யுங்கள் முடியாவிட்டால் துன்பம் விளைவிக்கவேண்டாம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை இந்த நூலில் எழுதியிருக்கிறாா்.

  விழாவில் கணையாழி ஆசிரியா் ம.ராஜேந்திரன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் ஆகியோா் பங்கேற்றனா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai