கடவுள் சிலைகளுக்கு உல்லன் போர்த்திய வடமாநிலம்

உத்தரபிரதேசத்தில் உறைபனி நிலவுவதால் அங்குள்ள மக்கள் கடுங்குளிரை அனுபவித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்ல அங்குள்ள கடவுள்களும் கூடக் குளிரை உணர்கிறார்கள்.
Gods wearing wollen shawl in UP
Gods wearing wollen shawl in UP

லக்னோ, டிசம்பர் 19:  உத்தரபிரதேசத்தில் உறைபனி நிலவுவதால் அங்குள்ள மக்கள் கடுங்குளிரை அனுபவித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்ல அங்குள்ள கடவுள்களும் கூடக் குளிரை உணர்கிறார்கள்.

வாரணாசியில், படா கணேஷ் கோவிலில், கருவறைத் தெய்வத்தை அங்குள்ள கோயில் பூசாரிகள் குல்ட் (quilt) என்று சொல்லப்படக்கூடிய கனத்த ரஜாயால் மூடி வைத்திருக்கிறார்கள், கணேச விக்கிரகம் மட்டுமல்ல அவரது வாகனமான மூஷிகத்திற்கும்(எலி) ஒரு கம்பளிச் சால்வை வழங்கப்பட்டுள்ளது.

அங்கு சிவன் கோயில்களில், சிவலிங்கங்களும் கூட இந்தக் குளிர்காலத்தில் சால்வையால் மூடப்பட்டே காட்சியளிக்கின்றன.

இதென்ன விநோதமான பழக்கமாக இருக்கிறதே? என்ற கேள்விக்கு ஆச்சார்யா சமீர் உபாத்யாயா,  கடவுள் சிலைகள் ‘பிராண் பிரதிஷ்டா’ என்ற பெயரில் கோயில் எழுந்தருளல் செய்யப்பட்ட பிறகு அங்கிருக்கும் கடவுள் சிலைக்கு உயிர் இருப்பதாகவே நம்பப் படுகிறது. அப்படி கடவுள் உயிருள்ளவராகக் கருதப்படுவதால் இங்கு நிலவும் வானிலை மாறுபாடுகளால் அவரது உடல்நலன் கெட்டு விடக்கூடாது என்பதால் அவர் இவ்விதமாகப் பாதுகாக்கப்படுகிறார். என்று தெரிவித்தார்.

அயோத்தியில், ராம் ஜன்மபூமி தளத்தில் உள்ள தற்காலிக கோவிலில் உள்ள ராம் லல்லா ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார், சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதால், காற்றைச் சூடாக வைத்திருக்க அங்கு ஒரு ஹீட் புளோயர் (Heat Blower) நிறுவப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது, குறிப்பாகச் சொல்வதென்றால் ‘லட்டு கோபால்’ என்று அழைக்கப்படக் கூடிய  அவரது குழந்தை பருவ அவதாரச் சிலையின் மீது மிகுந்த கவனமும், கரிசனமும் காட்டப்படுகிறது. மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் தெய்வத்தை மறைக்க சிறிய கம்பளி ஸ்வெட்டர்ஸ் மற்றும் சால்வைகள் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் அங்கு வருகை தரும் பக்தர்கள் குளிரைச் சமாளிக்கத் தோதாத அவர்களுக்கென திறந்த வெளியில் நெருப்பு மூட்டி கனப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

பல பக்தர்கள் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கு பட்டாடைகளைப் போல கம்பளி ஆடைகளையும் சாற்றி வருகிறார்கள் என்றும் தகவல்.

இந்தப் புனித நகரங்களில் மத வழிபாட்டுக்கு உரிய பொருட்களை விற்கும் கடைகள் பலவற்றில் தெய்வங்களுக்கான குளிர்கால கம்பளி ஆடைகளும் கூட சேமித்து வைக்கப்பட்டுள்ளனவாம்.

இன்னுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், சில ஈ-காமர்ஸ் தளங்கள் பக்தர்களின் ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றார் போல கடவுள்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிசைனர் கம்பளி ஆடைகளையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் என்பதே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com