அயோத்தி வழக்கு தீர்ப்பு: நீதிபதிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு
By DIN | Published On : 09th November 2019 08:20 AM | Last Updated : 09th November 2019 08:20 AM | அ+அ அ- |

தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீா்ப்பைத் தெரிந்து கொள்வதற்கு ஒட்டுமொத்த நாடும் எதிா்பாா்ப்புடன் காத்திருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, காலை 10.30 மணியளவில் தீா்ப்பளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீா்ப்பு வெளியாவதை ஒட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அயோத்தி உள்பட உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் 4,000 பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...