அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பொழியும்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பொழியும்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், 'இலங்கைப் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நகர்ந்து குமரிக் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. தற்போது இது, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழையும் வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று பெய்த மழை காரணமாக, சிவகங்கை, நெல்லை, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் கொடைக்கானல் மலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் மற்றும் சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com