அட்டகாசமான செல்ஃபி எடுக்க ஆசையா? இதோ சில பயனுள்ள செயலிகள்!

இப்போதெல்லாம் காலையில் எழுந்தது முதல் இரவில் உறங்கச் செல்வது வரையில் செல்ஃபோனே கதி என்று இருப்பவர்கள்தான் அனேகம்.
அட்டகாசமான செல்ஃபி எடுக்க ஆசையா? இதோ சில பயனுள்ள செயலிகள்!

இப்போதெல்லாம் காலையில் எழுந்தது முதல் இரவில் உறங்கச் செல்வது வரையில் செல்ஃபோனே கதி என்று இருப்பவர்கள்தான் அனேகம். இவர்கள் அதில் என்ன தான் கண்டார்கள் என்று மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். சிலருக்கு கேம் விளையாடுவது, சிலருக்கு யூட்யூப் பார்ப்பது, சிலருக்கு பாடல் கேட்பது என்று செல்ஃபோனில் விருப்பங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களின் முக்கியமான அம்சம் பொழுதுபோக்கு என்பதாகத்தான் இருக்கிறது. வாக்கிங் செல்வது முதல், இதயம் பத்திரமாக உள்ளதா என்று கூறும் அளவிற்கு இப்போதைய மொபைல்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி பல விஷயங்கள் இதற்குள் புதையல் என புதைந்து கிடக்க, உங்களுக்குப் பிடித்த App-களை (செயலிகளை) Playstore-ல் டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

**

முகநூலில் பார்த்து ரசிக்கும் சில விடியோக்களை திரும்பத் திரும்ப பார்க்க ஆசையா? இந்த செயலி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். LC Mini என்ற செயலிதான் அது. இதன் மூலம் ஃபேஸ்புக் விடியோக்களை டவுன்லோடு செய்து போனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். சிக்கனமான டேட்டா செலவுடன் பிரவுசிங் செய்வது, போனை நைட் மோடுக்கு, மாற்றிக் கொண்டு கண்களை உறுத்தாத வெளிச்சத்தில் மொபைல் போன் உபயோகிப்பது போன்றவையும் கூடுதலாக இதில் இருக்கின்றன.

**

Youtube Kids, குழந்தைகளுக்கு மட்டுமான பாதுகாப்பான யூட்யூப் செயலி இது. பெரியவர்களுக்கான விடியோக்களை விளம்பரங்களையோ தானாக ஓடி வந்து குழந்தைகளை திசை திருப்பாது. அவர்கள் பார்க்கத் தகுந்த காணொளிகளை மட்டுமே இதன் மூலம் பார்க்க முடியும். தவிர ஒரு நாளில் எவ்வளவு நேரம் இதனைப் பயன்படுத்துவது என்று வரையறை செய்து வைக்கவும் முடியும். பெரியவர்களுக்கான யூட்யூப் உருவாக்கி இருக்கும் கூகுள் நிறுவனம்தான் இந்த குட்டீஸ் யூட்யூப்யும் உருவாக்கி இருக்கிறது.

**

வாழ்த்துகளை வண்ணமயமான டிஜிட்டல் கேக்குகளில் அனுப்ப வேண்டுமா? உங்களுக்கான செயலி இதுதான் cake with Name. இது ஸ்பெஷபலான ஒரு கேக் தயாரித்து அதில் பிறந்த நாள் மற்றும் பெயரையும் எழுதி, பிரத்யேக வாழ்த்தும் அனுப்பலாம்.

**

சிலருக்கு புதிர் போடுவது மிகவும் பிடிக்கும். பத்திரிகைகளில் வரும் விடுகதைகளை படித்து மகிழ்வாரக்ள். அவர்களுக்கான ஒரு செயலி இது. Tamil Vidukathai. விடுகதைகளை புதிர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு விடுகதையையும் படித்து முடித்ததும், விடைகளை யோசித்து அதன்பிறகு சரியான விடையை செயலியில் படித்து தெரிந்து கொள்ளலாம். அறிவுத்திறனை அதிகரிக்கும் ஆக்கபூர்வமான செயலி இது.

**

செல்ஃபி பிரியர்களுக்குப் பயன்படும் ஸ்வீட் செயலி (sweet selfie) இது. செல்ஃபோனில் நம்மை நாமே செஃல்பி எடுத்துக் கொண்டதும் முகத்தில் இருக்கும் மாசு மருக்களை நீக்கிக் காட்டுவதற்கும், தோலின் சுருக்கங்ளைப் போக்கி புத்துணர்ச்சியுடன் முகத்தை பளிச்சென்று காண்பிக்க இந்த செல்ஃபி

**

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை காலம் நவராத்திரி. ஒன்பது நாட்களும் வீடுகளில் அம்மனை பூஜித்து மகிழ்வார்கள். கூடவே ஜெய ஜெய தேவி துர்காதேவி சரணம் என அம்மனைத் துதுக்கும் பாடல்கள் ஒலித்தால் எப்படி இருக்கும்! அதற்காகவே இந்த (Amman songs) செயலியைப் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தச் செயலியை டவுன்லோட் செய்து உங்கள் போனில் வைத்துக் கொண்டால், பிறகு இன்டர்நெட் வசதி இல்லாமலேயே உங்கள் செல்போனில் உங்களுக்குப் பிடித்த இந்த அம்மன் பாடல்களை அழகுத் தமிழில் ஒலிக்கச் செய்து கேட்டு மகிழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com