முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லம் சார்பில் 4,000 குடும்பத்தினருக்கு உதவி
By DIN | Published On : 19th April 2020 03:37 PM | Last Updated : 19th April 2020 03:37 PM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டி : சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லம் சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம், மாநெல்லூர் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 4,000 பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவிகள் ஞாயிறன்று வழங்கப்பட்டன.
ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல செயலாளர் சத்ய ஞானானந்தர் மேற்பார்வையில் 17 பேர் கொண்ட குழுவினர் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் பழங்குடி இன மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.
கண்ணம்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார், துணைத் தலைவர் மாலதி குணசேகரன், கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார் பங்கேற்றனர்.
மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் தலைமையிலும், சூரப்பூண்டியில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார், ஊராட்சித் தலைவர் வாணிஸ் ரீபாலசுப்பிரமணியம், கண்ணன்கோட்டையில் ஊராட்சித் தலைவர் கோவிந்தசாமி, செதில்பாக்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உமா மகேஷ்வரி, பூவலம்பேட்டில் ஊராட்சித் தலைவர் வெங்கடாசலபதி ஆகியோர் தலைமையில் ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லத்தினர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.