தமிழக அரசின் நிவாரண பொருள்களைக் கொண்டுசெல்ல கேரள சோதனைச்சாவடியில் தடை

தமிழக அரசின் கரோனா நிவாரண பொருள்களைக் கொண்டு செல்ல கேரள சோதனை சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டதால் வருவாய்த் துறையினர் திரும்பி வந்தனர்.
தமிழக அரசின் நிவாரண பொருள்களைக் கொண்டுசெல்ல கேரள சோதனைச்சாவடியில் தடை


போடி:   தமிழக அரசின் கரோனா நிவாரண பொருள்களைக் கொண்டு செல்ல கேரள சோதனை சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டதால் வருவாய்த் துறையினர் திரும்பி வந்தனர்.

தமிழக கேரள எல்லையோரம் உள்ள மலைக் கிராமங்கள் டாப் ஸ்டேசன், சென்ட்ரஸ் ஸ்டேசன், போடிமெட்டு. இந்தக் கிராமங்களுக்குத் தேவையான ரேசன் பொருள்கள் ஜீப் மூலம் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும். இதில் டாப் ஸ்டேசன் மலைக் கிராமத்திற்கு கேரள மாநிலம் மூணாறு வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும்.

தற்போது கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இரு மாநில எல்லையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டாப் ஸ்டேசன் மற்றும் சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராம மக்களுக்கான கரோனா நிவாரண பொருள்கள், காய்கறிகள், மளிகை பொருள்களை வருவாய்த் துறையினர் வாகனத்தில் ஏற்றி போடிமெட்டு சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றனர்.

அப்போது கேரள காவல்துறை சோதனை சாவடியில் தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போடி வட்டாட்சியர் மணிமாறன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் நிவாரண பொருள்களைக் கொண்டு செல்ல கேரள காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டதால் வருவாய்த் துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com