ஜம்மு-காஷ்மீரில் ஆக.5 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன
ஜம்மு-காஷ்மீரில் ஆக.5 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில்கரோனா வைரஸ் பரவல் குறையாததால், ஊரடங்கு நீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 20,972 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்த நிலையில், 613 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com