முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
ரக்க்ஷா பந்தன்: சுஷ்மா ஸ்வராஜை நினைவு கூர்ந்த வெங்கையா நாயுடு
By DIN | Published On : 03rd August 2020 04:21 PM | Last Updated : 03rd August 2020 04:23 PM | அ+அ அ- |

ரக்க்ஷா பந்தனையொட்டி சுஷ்மா ஸ்வராஜை நினைவு கூர்ந்த வெங்கையா நாயுடு
ரக்க்ஷா பந்தன் தினத்தையொட்டி துணை குடியரசு தலைவர் வெங்கையா நாடுயு மறைந்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நினைவு கூர்ந்தார்.
சகோதரத்துவத்தை மேன்மைப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ரக்க்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மா ஸ்வராஜூடன் முன்பு ரக்க்ஷா பந்தன் கொண்டாடிய புகைப்படத்தை சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அன்புள்ள சகோதரி சுஷ்மா ஸ்வராஜை இன்றைய தினத்தில் அதிகம் இழந்து தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Dear sister Sushma, missing you a lot today... pic.twitter.com/BARY1Mi367
— Vice President of India (@VPSecretariat) August 3, 2020
பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.