கணிப்புகளைக் காலிசெய்த ஆம் ஆத்மி

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமலாக்கி 60-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றித் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.
கணிப்புகளைக் காலிசெய்த ஆம் ஆத்மி


வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமலாக்கி 60-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றித் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் இந்தியா மட்டுமே ஆம் ஆத்மி 63 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. பாரதிய ஜனதா 7 இடங்களில் வெல்லும்; காங்கிரஸ் எங்கேயும் வெற்றி பெறாது எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே - 56, 14, 0 இடங்களைக் கைப்பற்றும் என ஏபிபி நியூஸ், 44, 23, 0 இடங்களைப் பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, 54, 15, 1 இடங்களைப் பெறும் என ரிபப்ளிக் - ஜன் கி பாத், 52, 17, 1 இடங்கள் என நியூஸ் எக்ஸ், 54, 15, 1 தொகுதிகள் என டிவி9 பாரத்வர்ஷ் ஆகியன தெரிவித்திருந்தன.

சொல்லிவைத்தாற்போல காங்கிரஸ் வெற்றி பெறப் போவதில்லை என அனைத்துக் கணிப்புகளுமே தெரிவித்திருந்தன. சிலர் மட்டும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டனர்.

ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், ஆனால்,  கடந்த தேர்தலில் வென்ற அளவுக்கு இடங்களைப் பெறாது என்றே அனைவரும் குறிப்பிட்டுவந்தனர். ஆனால், அனைத்துக் கணிப்புகளையும் தாண்டி, 60 தொகுதிகளையும் தாண்டி ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி.

2015 சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம்  ஆத்மி கைப்பற்றியிருந்தது. பாரதிய ஜனதாவுக்கு மூன்று இடங்கள். காங்கிரஸுக்கு எதுவுமில்லை. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் பற்றிய கணிப்புகள் மற்றும் பொய்க்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com