திமுக, அதிமுக கைப்பற்றும் மாவட்ட ஊராட்சிகள்

உள்ளாட்சித் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் ஏறத்தாழ இணையான அளவில் திமுகவும் அதிகமும் மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றவிருக்கின்றன.
திமுக, அதிமுக கைப்பற்றும் மாவட்ட ஊராட்சிகள்

உள்ளாட்சித் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் ஏறத்தாழ இணையான அளவில் திமுகவும் அதிமுகவும் மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றவிருக்கின்றன.

மாவட்ட ஊராட்சிகளில் சில இடங்களுக்கு இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவுகள்  அறிவிக்கப்படவில்லை.

வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 13 மாவட்ட ஊராட்சிகளை  திமுக கைப்பற்றுகிறது. அதிமுகவின் வசம் 11 மாவட்ட ஊராட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள்  இருக்கின்றன. மற்ற மூன்று மாவட்டங்களில் ஏறத்தாழ இரு கட்சிகளும் சம நிலையில் இருக்கின்றன.

மாவட்ட ஊராட்சிகளில் அதிமுக, திமுக கைப்பற்றியுள்ள இடங்கள் பற்றிய விவரங்கள்:

திமுக வசம்:

திருவள்ளூர்- தி.மு.க. 18, அ.தி.மு.க. 6,  திருவண்ணாமலை- தி.மு.க. 24, அ.தி.மு.க. 9, கிருஷ்ணகிரி- தி.மு.க. 15, அ.தி.மு.க. 8, திருச்சி- தி.மு.க. 19, அ.தி.மு.க. 5,  தஞ்சை- தி.மு.க. 23, அ.தி.மு.க. 5.

திருவாரூர்- தி.மு.க. 14, அ.தி.மு.க. 3, நாகப்பட்டினம்- தி.மு.க. 15, அ.தி.மு.க. 5, பெரம்பலூர்- தி.மு.க. 7, அ.தி.மு.க. 1, புதுக்கோட்டை- தி.மு.க. 13, அ.தி.மு.க. 9, நீலகிரி- தி.மு.க. 5, அ.தி.மு.க. 1,

மதுரை- தி.மு.க. 13, அ.தி.மு.க. 9, திண்டுக்கல்- தி.மு.க. 16, அ.தி.மு.க. 7, ராமநாதபுரம்- தி.மு.க. 12, அ.தி.மு.க. 4.

அதிமுக வசம்:

சேலம்- தி.மு.க. 1, அ.தி.மு.க. 15, கோவை- தி.மு.க. 5, அ.தி.மு.க. 11,  திருப்பூர்- தி.மு.க. 4, அ.தி.மு.க. 13, ஈரோடு- தி.மு.க. 5, அ.தி.மு.க. 14, நாமக்கல்- தி.மு.க. 4, அ.தி.மு.க. 14, கரூர்- தி.மு.க. 3, அ.தி.மு.க. 9.

தருமபுரி- தி.மு.க. 7, அ.தி.மு.க. 10,  அரியலூர்- தி.மு.க. 1, அ.தி.மு.க. 11, தேனி- தி.மு.க. 2, அ.தி.மு.க. 8, விருதுநகர்- தி.மு.க. 7, அ.தி.மு.க. 13, தூத்துக்குடி- தி.மு.க. 5, அ.தி.மு.க. 12.

ஏறத்தாழ சமமாக இருக்கும் மாவட்டங்கள்:

குமரி- தி.மு.க. 5, அ.தி.மு.க. 6, சிவகங்கை- தி.மு.க. 8, அ.தி.மு.க. 8, கடலூர்- தி.மு.க. 14, அ.தி.மு.க. 15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com