கவிஞர் கைஃபி ஆஸ்மிக்கு கூகுள் மரியாதை

புகழ்பெற்ற உருதுக் கவிஞர்  கைஃபி ஆஸ்மி என்ற சய்யீத் அத்தர் ஹுசைன் ரிஸ்வியின் 101 ஆவது பிறந்த நாள் இன்று.
கவிஞர் கைஃபி ஆஸ்மிக்கு  கூகுள் மரியாதை

புகழ்பெற்ற உருதுக் கவிஞர்  கைஃபி ஆஸ்மி என்ற சய்யீத் அத்தர் ஹுசைன் ரிஸ்வியின் 101 ஆவது பிறந்த நாள் இன்று. பிறந்த நாளையொட்டி ஆஸ்மியின் படத்தை வெளியிட்டு  மரியாதை செலுத்தியிருக்கிறது கூகுள் தேடுபொறி.

உத்தரப் பிரதேசத்தில் ஆஸம்கர் மாவட்டத்திலுள்ள மீஸ்வா என்ற கிராமத்தில் 1919 ஜனவரி 14 ஆம் தேதி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஆஸ்மி, உருது இலக்கியத்தை இந்திய திரைப்படங்களுக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.

தமது 11 வயதில் கஜல் பாடல்களை எழுதத் தொடங்கினார் ஆஸ்மி.  முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்துடனும் பொதுவுடைமை இயக்கத்துடனும் கொண்ட தொடர்பு இவரை சமூக அக்கறை கொண்ட எழுத்தாளராக மாற்றியது.

கஜல் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள கைஃபி ஆஸ்மி, திரைப்படங்களுக்கும் எழுதியுள்ளார். சாகித்திய அகாதெமி விருது உள்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். மும்பையில் 2002 மே 10 ஆம் தேதி ஆஸ்மி காலமானார்.

புகழ்பெற்ற ஹிந்தித் திரைப்பட - நாடகக் கலைஞர் ஷபனா ஆஸ்மி இவருடைய மகள்; ஒளிப்பதிவாளர் பாபா ஆஸ்மி இவருடைய மகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com