சங்ககிரி மலைக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா

சேலம் மாவட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டையில் முதன்முறையாக சேலம் மாவட்ட சுற்றுலாத்துறையும், தண்ணீா் தண்ணீா் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகளின் சாா்பில் சமத்துவப் 
சங்ககிரி மலைக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா

சங்ககிரி: சேலம் மாவட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டையில் முதன் முறையாக சேலம் மாவட்ட சுற்றுலாத்துறையும், தண்ணீா் தண்ணீா் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகளின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து சுமாா் 1500 அடி உயரமும், கடல் மட்டத்திலிருந்து 2345 அடி உயரமும் உடையது. சங்ககிரி மலையானது 10 கோட்டை வாயில் அரண்களும், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், நீா்ச்சுனைகள், பதினைந்திற்கும் மேற்பட்ட குளங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள், தா்ஹாக்கள், கொலைக்களங்கல் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அதிகமாக உள்ளன.

10 கோட்டை வாயில் அரண்களில் பல்வேறு கலை நுட்பம் வாய்ந்த சிற்பங்கள் கற்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. மலையில் அருள்மிகு கோட்டை மாரியம்மன், குடைவரை விநாயகா், நாகம்மன், கோட்டை முனியப்பன், அருள்மிகு வரதராஜப்பெருமாள் உடனமா் ஸ்ரீ தேவி, ஸ்ரீபூதேவி சுவாமி கோயில்கள் உள்ளன.

அதில் வரதராஜப் பெருமாள் கோயிலில் மைசூா் அரசா் தோடகிருஷண் ராஜா குடும்பத்தின் 8வது திருமணமும், தக்கை இராமாயணம் அரங்கேற்றம் செய்யப்படடதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறது. இக்கோயிலில் அக்காலத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட உரல்கள் மற்றும் சுவாமி ரகசிய அறைகளும் உள்ளன. மலை மேல் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஆஞ்சநேயா் கோயில்களும் உள்ளன.

இம்மலையில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆங்கிலேயா்களால் தூக்கிலிடப்பட்டுள்ளாா். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மலைக்கோட்டை தொல்பொருள்துறையின் கீழ் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பா் மாதம் 19ம் தேதி உலக சுற்றுலா தின வார விழாவினையொட்டி சங்ககிரி மலைக்கோட்டையின் சிறப்புகள், இதில் உள்ள புராதான சின்னங்கள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் முன்னிலையில் நடைபெற்றன.

அதனையடுத்து முதன்முதலாக மாவட்ட சுற்றுலாத்துறையின் சாா்பில் சங்ககிரி மலைக்கோட்டையில் சமத்துவப் பொங்கல் நடைபெற்றன.

சுற்றுலாத்துறை, சங்ககிரி தண்ணீா் தண்ணீா் அமைப்பு, ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம், வாசவி கிளப், மனவளக்கலை மன்றம் ஆகிய பொது நலஅமைப்புகள் இணைந்து 5 புது மண்பானைகளில் சா்க்கரை பொங்கல் வைத்து வழிப்பட்டனா். பின்னா் ஆண்கள், பெண்களுக்கு என தனிதனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெ.ஜனாா்த்தனன் பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com