முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 20, 2020
By DIN | Published On : 20th January 2020 03:57 PM | Last Updated : 28th January 2020 02:55 PM | அ+அ அ- |

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்குப் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வணங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகப் புது தில்லி வீதிகளில் திங்கள்கிழமை ஊர்வலமாகச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஒத்திகையின்போது மோட்டார் சைக்கிள் குழுவினரின் சாகசப் பயணம்.
மகாராஷ்டிரத்தில் தாணேயில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் குருகுல பிரதிஸ்தான் அமைப்பு நிறுவிய புல்லாங்குழல் மேதை பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா புரஸ்கார் விருதை சங்கீத மார்த்தாண்ட் பண்டிட் ஜஸ்ராஜுக்கு வழங்குகிறார் ஹரிபிரசாத் சௌராசியா.
தெலங்கானாவில் ஹைதராபாத்தில் ஷாத்நகர் பகுதியில் திங்கள்கிழமை வீட்டுக் கூரையின் படுத்திருந்த சிறுத்தையொன்றை மயக்க ஊசி செலுத்திப் பிடித்துச் செல்லும் வனத் துறையினர்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பழங்கால கார்கள் அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு பழைய கார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 26-வது திரைக் கலைஞர்கள் சங்க விருதுகள் வழங்குவிழாவில் லியோனார்டோ டிகாப்ரியோவிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுகிறார் ராபர்ட் டி நீரோ (இடது).