தென் சீனக் கடலில் இரு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்கள் பயிற்சி

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இரு விமானந் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
தென் சீனக் கடலில் அமெரிக்கக் கப்பல்கள்
தென் சீனக் கடலில் அமெரிக்கக் கப்பல்கள்

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இரு விமானந் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இந்தப் பகுதியில் சீனா தன் பலத்தைக் காட்டிவரும் நிலையில், இவ்விரு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றன.

யுஎஸ்எஸ் ரொனால்ட் ரேகன், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானந் தாங்கிக் கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை அமெரிக்க கடற்படையும் உறுதி செய்துள்ளது.

சுதந்திரமான, தாராளமான இந்திய - பசிபிக் பிராந்தியம் என்ற நோக்கத்துக்கு ஆதரவாக சீனக் கடலில் இவ்விரு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும்

இந்தப் பகுதியிலுள்ள நான்கு போர்க் கப்பல்களுடன் இணைந்து, விமானங்களின் தாக்குதிறனை இந்தக் கப்பல்கள் பரிசோதித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com