கூத்தாநல்லூர்: வி.ஏ.ஓ.க்கு கரோனா உறுதியானதால் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர கிராம நிர்வாக அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியனதால், வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டது.
கூத்தாநல்லூர்: வி.ஏ.ஓ.க்கு கரோனா உறுதியானதால் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர கிராம நிர்வாக அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியனதால், வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டது. கூத்தாநல்லூர் வட்டத்தில், கூத்தாநல்லூர், கமலாபுரம் மற்றும் வடபாதிமங்கலம் என 3 பிர்க்காக்கள் உள்ளன. இதில் 55 கிராமங்கள் உள்ளது. 55 கிராமங்களுக்கும் 40 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். 

கரோனா உலகமெங்கும் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்டம் கரோனா தொற்றாலர் இல்லாமல் பச்சை நிறத்தில் இருந்தது. தற்போது 539 கரோனா தொற்றாலர்கள் உள்ளனர். இந்நிலையில், கூத்தாநல்லூர் நகர கிராம நிர்வாக அலுவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டது. நகராட்சியிலிருந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், சமூக நலத்துறை தனி வட்டாட்சியர், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர், 3 வருவாய் ஆய்வாளர்கள், 40 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவருக்கும், நாளை காலை மருத்துவக்குழு மூலம் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும், நகர கிராம நிர்வாக அலுவலருடன், கிளியனூர், புள்ளமங்கலம், சேகரை, பழையனூர் மற்றும் வக்ராநல்லூர் உள்ளிட்ட ஊர்களின் கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரே அறையில் தங்கியுள்ளதால், அவர்களும் சிறப்பு பரிசோதனை செய்யப்பட உள்ளனர். பொது மக்கள் யாரும் வட்டாட்சியர் அலுவலகம் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல், மேலும், அதங்குடி தெற்குச் சேத்தியில் 30 வயது பெண், வடக்குத் தெருவில் 40 வயது ஆண், பொதக்குடி காந்தி நகரில் அண்மையில் உயிரிழந்த பெண்ணின் , கணவர், மகன், மகள் உள்ளிட்ட 4 பேர் என 6 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றுப் பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com