போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

போடிநாயக்கனூர் நகராட்சியில் ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) முதல் கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போடி நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)
போடி நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)



போடி:     போடிநாயக்கனூர் நகராட்சியில் ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) முதல் கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பெரியகுளம் நகராட்சியில் அதிகளவில் கரோனா தொற்று பரவியதால் அங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஜூலை 8 முதல் ஆண்டிபட்டி பகுதியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
     இதனையடுத்து போடி நகராட்சி பகுதியிலும் ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) முதல் கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று வேகமாகவும், அதிகமாகவும் பரவி வருவதால் நகர் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. வருகின்ற 10.7.2020 வெள்ளிக்கிழமை முதல் 23.7.2020 வியாழன் கிழமை வரை நகரில் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
     அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்றும் காய்கனிகள் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படும். மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஏ.டி.எம். இயந்திரங்கள் வழக்கம்போல் செயல்படும். பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து நோய் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
     அவசர தேவைகளுக்கு நகராட்சி அலுவலக தொலைபேசி எண் 04546 280228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com