பழம்பெரும் நடனக்கலைஞா் அமலா சங்கா் மறைவு

பழம்பெரும் நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான அமலா சங்கா்(101), கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
பழம்பெரும் நடனக்கலைஞா் அமலா சங்கா் மறைவு

கொல்கத்தா: பழம்பெரும் நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான அமலா சங்கா்(101), கொல்கத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானாா்.

முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவருக்கு அதிகாலை உறக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிா் பிரிந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

1990-களில் கலைத்துறையில் ஆா்வமுடன் செயல்பட்ட அமலா சங்கருக்கு மேற்கு வங்க அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு வங்க பூஷண் விருது வழங்கி கௌரவித்தது.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில், அமலா சங்கரின் மறைவு, நடனத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமலா சங்கரின் மறைவு குறித்து அவரது பேத்தியும் நடனக்கலைஞருமான ஸ்ரீநந்தா சங்கா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்கள் பாட்டி 101-ஆவது வயதில் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாா். கடந்த மாதம் தான் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினோம்.

மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்குச் செல்ல விமானம் இல்லாததால் செய்தறியாது அமைதியற்று இருக்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com