அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் விலக்கில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கோவிலாங்குளம் விலக்கு பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க கிராமத்தினர் கோரக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் விலக்கில் பயணிகள் நிற்குடை இல்லை.
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் விலக்கில் பயணிகள் நிற்குடை இல்லை.

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கோவிலாங்குளம் விலக்கு பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க கிராமத்தினர் கோரக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் கோவிலாங்குளம் விலக்கில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. கோவிலாங்குளம் கிராமத்தினர் மதுரை, கல்குறிச்சி, காரியாபட்டி உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்ல வேண்டுமானால் இப் பேருந்து நிறுத்தத்திற்குச் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை கடந்து வந்து தான் பேருந்தைப் பிடிக்க இயலும்.

இதேபோல அருகே உள்ள மற்றொரு கிராமமான இராமானுஜபுரம் கிராமத்தினரும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரைக் கடந்து வந்து இதே கோவிலாங்குளம் விலக்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துதான் பேருந்துகளைப் பிடிக்க இயலும்.

இவ்விதமாக இரு கிராமத்தினருக்கும் பொதுவாக உள்ள இப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப் பல முறை கோரிக்கை வைத்தும் இரு கிராமங்களின் ஊராட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லையெனப் புகார் எழுந்துள்ளது. இதனால் இங்கு பேருந்திற்காகக் காத்திருக்கும் போது மழை ,வெயிலுக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல் கிராமத்தினர் தவித்து வருகின்றனர்.

குறிப்பாகப் பள்ளி மாணவர்களும், முதியோரும் சிறு குழந்தைகளுடன் வரும் தாய்மார்களும் அதிகம் அல்லல்படுகின்றனர். ஆகவே, கோவிலாங்குளம், இராமானுஜபுரம் ஆகிய இரு கிராம மக்களின் தேவை கருதி இப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்துத்தர மீண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com