ஏலக்காய் விலை தொடர்ந்து சரிவு

ஏலக்காய் விலை தொடர்ந்து சரிவு

தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் இன்று (திங்கள்கிழமை), ஏலக்காய் விலை சரிந்து தரம் கிலோ ரூ.1,145.35-க்கு விற்பனையானது.

தேனி: தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் இன்று (திங்கள்கிழமை), ஏலக்காய் விலை சரிந்து தரம் கிலோ ரூ.1,145.35-க்கு விற்பனையானது.

பொது முடக்கம் காரணமாக இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. 

பின்னர், புத்தடியில் கடந்த மே 28-ஆம் தேதியும், போடியில் கடந்த ஜூன் 3-ஆம் தேதியும் ஏலக்காய் வர்த்தகம் மீண்டும் தொடங்கியது.

பொது முடக்கத்திற்கு முன்பு கடந்த மார்ச் 19-ஆம் தேதி புத்தடியில் நடைபெற்ற வர்த்தகத்தில் ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.2,359.62-க்கும், உயர் தரம் கிலோ ரூ.3,198-க்கும் விற்பனையானது. 

ஏலக்காய் வர்த்தகம் மீண்டும் தொடங்கிய போது, புத்தடியில் கடந்த மே 28-ஆம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,769.93-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,410-க்கும். போடியில் கடந்த ஜூன் 3-ம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,850.89-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,573-க்கும் விற்பனையானது.  
   
இந்த நிலையில், ஏலக்காய் விலை தொடர்ந்து சரிந்து, போடியில் சி.ஜி.எப்., ஏல நிறுவனம் மூலம் திங்கள்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1145.35-க்கும், உயர் தரம் கிலோ ரூ.1,758-க்கும் விற்பனையானது. 

இந்த வர்த்தகத்தில் மொத்தம் 50 ஆயிரத்து 32 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு, 37 ஆயிரத்து 787 கிலோ விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com