தென் மாவட்டங்களில் தொற்று கண்டறிய ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

மதுரை மற்றும் விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் கரோனா தொற்று கண்டறிய ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று விருதுநகர் எம்பி தாகூர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
corona test
corona test

விருதுநகர் : மதுரை மற்றும் விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் கரோனா தொற்று கண்டறிய ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று விருதுநகர் எம்பி தாகூர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வருக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டில் வியாபார மையமாகவும் பட்டாசு தீப்பெட்டி அச்சுத் தொழில்களில் தலைமை இடமாகவும் விளங்குவது விருதுநகர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் கரோனா நோயின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மதுரை, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த விஷயத்தில் மாநில அரசு இதை மிக கவனமாக பார்க்க வேண்டும்.

தில்லியில் கரோனா தொற்று கண்டறிவதற்கு தற்போது அரசு எடுத்திருக்கும் முயற்சி (Rapid antigen test) ராபிட் ஆன்டிஜென் சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை மூலம் 20 நிமிடங்களில் கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.

அதே போல எந்தெந்த பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறதோ அந்த வார்டுகளில் அறிகுறிகள் இருந்தால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று (Rapid antigen test) விரைவான ஆன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டும்.

தற்போது உள்ள நிலையில், பரிசோதனைக்கான முடிவுகள் வருவதற்கு மிகவும் கால-தாமதம் ஆகிறது. இந்த அவல நிலையை போக்க மதுரை மற்றும் விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் தில்லியில் உள்ள போல (ராபிட் ஆன்டிஜன் டெஸ்ட்) பரிசோதனை செய்யப்பட வேண்டும்.  

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் தான் உள்ளன இந்த நோய் பரவல் திடீரென்று அதிகரித்தால் இந்த படுக்கை வசதிகள் போதாது. ஆகவே மேலும் கூடுதலாக 4,000 படுக்கை அமைத்து தர வேண்டும்.

தற்போது மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நிலைமை கைமீறி போவதற்குள் உடனடியாக தலையிட்டு மக்களை நோய் தொற்றிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com