முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
பெரியகுளத்தில் மழை: மா விவசாயிகளுக்குப் பாதிப்பு
By DIN | Published On : 03rd March 2020 07:04 PM | Last Updated : 03rd March 2020 07:04 PM | அ+அ அ- |

பெரியகுளத்தில் மழை
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நல்ல மாலை மழை பெய்தது.
கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் விழுந்தது.
ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு பெய்த இந்த மழை காரணமாக மக்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்றனர். நிலமும் குளிர்ந்தது.
ஆனால், இந்த மழையால் மா விவசாயிகளுக்குப் பாதிப்புதான் ஏற்படும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மா விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. இது மா மரங்களில் பூ பூக்கிற காலகட்டம். மாம்பூக்களில் மழைத் தண்ணீர் கோத்துக் கொண்டால் அழுகிப் போய் கீழே விழுந்துவிடும். இதனால் மா விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.