பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 4, 2020

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 4, 2020

புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற லலித் கலா அகாதெமியின் விருது வழங்குவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் ஆகியோருடன் விருது பெற்றோர்.

மகளிர் தினத்தையொட்டி புது தில்லியில் தனித் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்புப் பெண்களைக் கொண்டாடும் விழாவில் சிறப்பிடம் பெற்றவர்களுடன் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான மகேந்திரநாத் பாண்டே.

மீண்டும் வெளிச்சம்: புது தில்லியில் கடந்த வாரம் வகுப்புக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லியில் மின் கம்பங்களை நிறுவும் பணியில் மின்வாரிய ஊழியர்கள்.

முகமூடிகள்: ஹோலி திருவிழா வருவதையொட்டி ஜம்மு நகரில் கடையொன்றில் கொண்டாட்டத்துக்கான முகமூடிகளை அடுக்கிவைக்கும் கடைக்காரர்.

பற பற: மகாராஷ்டிரத்தில் தாணே நகரின் பின்னணியில் பூநாரைகளின் கூட்டம்.

அள்ளக் குறையாத வெள்ளை: ஹிமாச்சலப் பிரதேசத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் கோக்சார் அருகே சாலையில் குவிந்திருக்கும் பனிப் பொழிவை அகற்றும் பணி.

பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய கமிஷனில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஸ்வீடன் பருவநிலை மாற்றச் செயற்பாட்டாளரான சிறுமி கிரெய்தா துன்பர்கி.

புதிர்: செவ்வாய்க் கோளில்  உயிர்கள் இருப்பதற்கான துப்புகள் ஏதேனும் தரக்கூடியதான புதிரான துளையொன்றை நாசா கண்டறிந்துள்ளது. நாசா துளையின் பிரதி படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com