பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 5, 2020

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 5, 2020

வடகிழக்கு தில்லியில் நடந்த வகுப்பு மோதல் தொடர்பாக நள்ளிரவில் நீதிமன்றத்தைக் கூட்டி,  பாரதிய ஜனதா தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதருக்கு நடைபெற்ற வழியனுப்பு விழா. இவ்வாறு அறிவுறுத்திய சில நாள்களிலேயே இவர், பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

புது தில்லியில் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி.

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆக்ராவில் முகக் கவசங்கள் அணிந்தபடி பள்ளிக்குத் தேர்வு எழுதச் செல்லும் குழந்தைகள்.

தப்பிப் பிழைக்க: தாய்லாந்தில் பாங்காக் நகரில் முகக் கவசங்கள் அணிந்தபடி உயர்நிலைப் பள்ளிக்கான நுழைவுத் தேர்வை எழுதும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர். தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.

மாநிலங்களவையில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் பேசுகிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

மக்களவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் பேசுகிறார் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி.

நினைவில் வாழும்...: ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரத்தில் மறைந்த மாநில முதல்வர் பிஜு பட்நாயக் பிறந்த நாளான வியாழக்கிழமை விளையாட்டுத் துறையினர் நடத்திய மின் மாரத்தான் போட்டி. 

காக்குமா, கவசங்கள்? : வடமேற்கு சீனாவில் மியான்சியான் பகுதியில் மின்னணுத் தொழிற்சாலையொன்றில் முகக் கவசங்கள் அணிந்தபடி பணிபுரியும் தொழிலாளர்கள். கரோனா வைரஸிலிருந்து தங்கள் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா.

வாழ்வைத் தேடி: கிரீஸுக்கும் துருக்கிக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் முள்கம்பி வேலிக்கு அப்பால் துருக்கிப் பக்கம் காத்திருக்கும் புலம்பெயர்வோர் மற்றும் அகதிகள். தம் நாட்டின் எல்லைகளைத் துருக்கி திறந்துவிட்டுவிட்ட நிலையில், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் துருக்கி வழியே கிரீஸுக்குள் நுழைந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயலுகிறார்கள்.

40 ஆண்டுகள்! : கிழக்கு பிரான்ஸில் ஸ்ட்ராஸ்பர்க் அருகே பாரிஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த அதிவேக  ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் ஓட்டுநர் மிக மோசமாகக் காயமுற்றபோதிலும் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்திப் பெரும் அழிவைத் தவிர்த்துவிட்டார். கடந்த 40 ஆண்டுகளில் பயணிகள் ரயில் சேவையில் இப்படியொரு விபத்து நடப்பது இதுவே முதல்முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com