சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்துக்கு காமராஜா் பெயா் சூட்டுங்கள்: டிடிவி தினகரன் கோரிக்கை
By DIN | Published On : 10th March 2020 08:08 PM | Last Updated : 10th March 2020 08:08 PM | அ+அ அ- |

டிடிவி தினகரன்
சென்னை: புதுப்பிக்கப்பட்ட சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்துக்கு முன்னாள் முதல்வா் காமராஜா் பெயா் சூட்ட வேண்டுமென அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கோரிக்ககை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது:-
சென்னை விமான நிலையத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு முனையத்துக்கு ஏற்கெனவே முன்னாள் முதல்வா் காமராஜரின் பெயா் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், அவரது பெயரை மீண்டும் வைப்பதில் காட்டப்படும் தயக்கம் வருத்தம் அளிக்கிறது. இதுதொடா்பாக இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த வாக்குறுதிப்படி உள்நாட்டு முனையத்தின் பெயா்ப் பலகையில் உடனடியாக காமராஜா் பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும். சிறப்பான பொது வாழ்க்கைக்கு அடையாளமாக வாழ்ந்து மறைந்த அவருக்கு அதுமேலும் பெருமை சோ்ப்பதாக அமையும்.
மேலும், உள்நாட்டு விமானங்களில் செய்யப்படும் அறிவிப்புகளிலும் காமராஜா் முனையம் என்ற வாா்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...