கருப்புத் திரை வாட்ஸ் ஆப்!

வாட்ஸ் ஆப் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு "டார்க் மோட்' எனப்படும் கருப்புத் திரை சேவை அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் அந்த நிறுவனம் வழங்கி உள்ளது.
கருப்புத் திரை வாட்ஸ் ஆப்!

வாட்ஸ் ஆப் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு "டார்க் மோட்' எனப்படும் கருப்புத் திரை சேவை அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் அந்த நிறுவனம் வழங்கி உள்ளது. கருப்புத் திரை சேவை விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு சோதனைகளை நடத்தி தற்போது அது வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் திரை பெரும்பாலும் அதிக வெளிச்சத்துடன் உள்ளதால் அது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவித்தன. குறிப்பாக இருள் சூழ்ந்த பகுதிகளில் வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்தினால் மிக அதிக அளவில் கண்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண கருப்புத் திரை சேவை, சில வாட்ஸ் ஆப் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டது. 

தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் கருப்புத் திரை சேவையை  மார்ச் 3 - ஆம் தேதி முதல் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. 

இதைப் பெறுவதற்காக வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் வாட்ஸ் ஆப் செட்டிங்சில் சென்று - சாட்ஸ்- தீம்- டார்க் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் வாட்ஸ் ஆப், கருப்புத் திரையில் இயங்கும். ஆன்ட்ராய்ட்டு 10, ஐஓஎஸ் 13 வெர்ஷனைப் பயன்படுத்துபவர்கள் தங்களது ஸ்மார்ட் போன் முழுவதையும் இந்த கருப்புத் திரையாக மாற்றலாம். அதற்காக "சிஸ்டம் டிபால்ட்' செட்டிங்ஸில் சென்று தேர்வு செய்து கொள்ளலாம்.

கருப்புத் திரையும் கண்களைப் பாதிக்கக் கூடும் என்ற சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஸ்மார்ட் போன்களை குறைந்த நேரம் பயன்படுத்தினாலே இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com