குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக சத்யாகிரக போராட்டம்

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக 12 இடங்களில்  கோயில் முன்பு இந்துக்கள் சத்யாகிரக போராட்டம்  நடைபெற்றது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிற நிலையில்
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக சத்யாகிரக போராட்டம்


குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக 12 இடங்களில்  கோயில் முன்பு இந்துக்கள் சத்யாகிரக போராட்டம்  நடைபெற்றது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிற நிலையில் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு  மாவட்டத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கூட்டங்கள் நடந்து வருகின்றது. குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் வீடுகளில் குடியுரிமை சட்டத்தை விளக்கி துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பார்வதி புறத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பிரமாண்ட பேரணியும் அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது.   

இந்நிலையில் நாகர்கோவில் அருகே 12 ஊர்களில் சத்யாகிரக போராட்டம் இன்று நடைபெற்றது. வட்டவிளை முத்தாரம்மன் கோயில் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தலைவர் சிவகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சிவலிங்க பெருமாள் பொருளாளர் ஜெயராம் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நாகர்கோவில் முன்னாள் நகராட்சி தலைவி மீனாதேவ் மாவட்ட துணை தலைவர் முத்துராமன் மண்டல தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் வட்டவிளை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

இதேபோல் பெரிய விளை முத்தாரம்மன்  கோவில், சரலூர் முத்தாரம்மன் கோவில் சரக்கல்விளை முத்தாரம்மன் கோயில், வெள்ளாடிச்சிவிளை முத்தாரம்மன் கோயில் முன்பு ம் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்களிடம் இருந்து குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கையெழுத்தும் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com