பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 18, 2020

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 18, 2020

வாராணசியில் மக்கள் வருகையில்லாத நிலையில் கங்கையில் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

கரோனா அச்சம் காரணமாக மும்பையில் வழிபாட்டுக்கு மூடப்பட்டுவிட்ட நிலையில் புனித மிக்கேல் தேவாலயத்தின் மூடப்பட்ட கதவுகளின் முன் வழிபடும் மக்கள்.

இராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் திக்ரிஸ் ஆற்றுப் பாலத்தைக் கடந்து செல்கிறார் ஒருவர். கரோனா வைரஸ் பரலவலைத் தடுக்க இராக் அரசு ஒரு வார கால ஊரடங்கை அறிவித்துள்ளது.

பிலிப்பின்ஸின் தலைநகர் மணிலாவில் பன்னாட்டு விமான நிலையத்தில் கரோனாவுக்கு அஞ்சி பிளாஸ்டிக் பைகளால் தற்காத்துக் கொண்டு புறப்பட்டுச் செல்லும் சீனக் குடும்பத்தினர். ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் நாட்டின் பிரதான வடக்குப் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று விதித்த காலக்கெடுவை பிலிப்பின்ஸ் அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது சிங்கப்பூருடன் மலேசியாவை இணைக்கும் சிங்கப்பூர் பெருவழி (இடம்: ஜோகர் பஹ்ரூ, மலேசியா). தற்காப்பு நடவடிக்கையாக மார்ச் 18 முதல் மக்கள் வந்துசெல்வதைத் தடுக்கும் வகையில் தன்னுடைய எல்லைகளை மலேசிய அரசு மூடிவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com