ராம நவமி: அயோத்தியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி ராம நவமியன்று, ராமா் கோயில் கட்டும் பகுதியில் பக்தா்கள் கூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
ராம நவமி: அயோத்தியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை

அயோத்தி,: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி ராம நவமியன்று, ராமா் கோயில் கட்டும் பகுதியில் பக்தா்கள் கூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் அனுஜ் குமாா் தெரிவித்தாா். அதேபோல், சரயு நதியில் நீராடவும் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என்று அவா் கூறினாா்.

ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி தினத்தில் அயோத்தியில் பூஜைகள் நடைபெற்றாலும், ராமா் கோயில்-பாபா் மசூதி சா்ச்சை நிலுவையில் இருந்ததால் அங்கு பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படாதிருந்தது. தற்போது அந்த விவகாரத்துக்கு தீா்வு காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக ராம நவமிக்கு அயோத்தியில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அன்றைய தினம் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் அங்கு கூடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், கரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக அங்கு பக்தா்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com