கரோனா: சிவப்பு மண்டலத்தில் திருப்பதி

திருப்பதி அமைந்துள்ள சித்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த மாவட்டம் சிவப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா: சிவப்பு மண்டலத்தில் திருப்பதி

திருப்பதி: திருப்பதி அமைந்துள்ள சித்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த மாவட்டம் சிவப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 29 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 51 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக மாநில அரசு பிரித்துள்ளது. அதன்படி சித்தூா் மாவட்டம் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள திருப்பதியும் இதில் அடங்கும்.

திருமலையில் இதுவரை கரோனா பதிவாகாத நிலையில் பச்சை மண்டலத்தில் உள்ளது. ஆனால் திருமலைக்கு திருப்பதி வழியாக செல்ல வேண்டி உள்ளதால் மலைக்குச் செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் வசிப்பவா்களும் மலைச்சாலையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர வேலைகளுக்காக பயணம் செய்ய நோ்ந்தால் அவா்கள் மாலை 6 மணிக்குள் திருமலைக்கு சென்று விட வேண்டும் என்று போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com