காவிரி உரிமை காக்க கருப்புக் கொடியேந்திப் போராட்டம்

காவிரி உரிமையைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தங்களது வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்தி இன்று மாலை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்
போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்

தஞ்சாவூர்: காவிரி உரிமையைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தங்களது வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்தி இன்று மாலை போராட்டம் நடத்தினர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னதிகாரமுள்ள அமைப்பாகச் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) அமைச்சக அதிகாரத்தின் கீழ் செயல்படும் கீழமை அலுவலகமாக நரேந்திர மோடி அரசு மாற்றியுள்ளது.

இத்திருத்தங்கள் கைவிடப்படவில்லை என்றால், மேக்கேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய நீராற்றல் துறை உடனடியாக அனுமதி கொடுத்து விடும்.
இப்போது செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மிக எளிதாக காவிரி உள்பட பல்வேறு ஆறுகளைப் பன்னாட்டுக் குழுமங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துவிடும். இத்திருத்தங்கள் செயல்பட்டால், உழவர்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல், அனைத்து மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, நீராற்றல் துறைக்கென திருத்தம் செய்யப்பட்ட புதிய பணி விதிகளின் பதிவு 7அ, 33 அ, ஆ, இ, ஈ, உ முதலியவற்றை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும். இப்போது நீக்கப்பட்டுள்ள பதிவு 32-ஐ சேர்க்க வேண்டும்.
இதை வலியுறுத்தி தஞ்சாவூர் கலைஞர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பதாகையும், கருப்புக் கொடியும் ஏந்தி இன்று மாலை போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் கலைஞர் நகரில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் அமமுக அ. நல்லதுரை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் நா. வைகறை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com