குடித்துவிட்டு வந்த கணவன்: கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை, அநாதையான 7 வயது சிறுமி
By DIN | Published On : 08th May 2020 10:10 PM | Last Updated : 08th May 2020 10:13 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் நரியனூரில் கணவன் குடித்துவிட்டு வந்ததைத் தொடர்ந்து நேரிட்ட குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்துப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
மேச்சேரி அருகே உள்ள நரியனூரில் எலக்ட்ரிகல் வேலை செய்து வந்தவர் சங்கர், வயது 35. இவர் இன்று, வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இதை அவருடைய மனைவி சுகன்யா, வயது 28, கண்டித்திருக்கிறார்.
இதையொட்டி, கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் அருகிலிருந்த கிணற்றில் குதித்து சுகன்யா தற்கொலை செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். இச்சம்பவம் குறித்து மேச்சேரி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.