கோயில்களைத் திறக்க மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை வேண்டுகோள்

சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட தமிழக கோயில்களைத் திறக்க வேண்டும் என்று அரசை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது
கோயில்களைத் திறக்க மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை வேண்டுகோள்

சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட தமிழக கோயில்களைத் திறக்க வேண்டும் என்று அரசை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றி மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  தெரிவித்துள்ளதாவது:

"ஊரடங்கு அறிவித்து சுமார்  40 நாள்கள் கடந்து விட்ட நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த பங்குனி, சித்திரை மாதக் கோயில் திருவிழாக்கள் அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

உக்கிர தெய்வங்களான பிரத்தியங்கிரா, சரபேஸ்வரர், காலபைரவர்,  சூலினி வழிபாடுகள் எல்லாம் தற்போது தடை செய்யப்பட்டுத் திருவிழாக்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகளை அரசு திறக்கும்போது, திருக்கோயில்களை சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட திறப்பதற்கு எந்த தடையும் இல்லை.

தமிழக அரசு திருக்கோயிலை 33 சதவிகித பணியாளர்களுடன் திறக்கலாம் என உத்தரவிட்டுப் பணியாளர்களைத் தவிர பக்தர்கள் யாரும் கோயிலுக்கு செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

பணியாளர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கும் போது, பக்தர்களை சமூக இடைவெளியுடன் இறைவனை வழிபட அனுமதிப்பதில் தவறில்லை.

பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு பிரச்சனைக்கும் நடை சாத்தப்படாத திருக்கோயில்கள் அனைத்தும் தற்பொழுது சாத்தப்பட்டிருக்கின்றன.

டாஸ்மாக் கடைகளைத் திறந்து சமூக இடைவெளியுடன் குடிப் பழக்கத்தினர் மது வாங்குவதற்கு உரிய காவல் பாதுகாப்பு கொடுக்கக் கூடிய அரசு,
திருக்கோயில்களையும் திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் இறைவனை தரிசிக்கவும் பிரார்த்தனை செய்யவும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என சேயோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com