சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்களுக்கு தற்பாதுகாப்பு கையுறைகள்

சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்களுக்கு தற்பாதுகாப்பு கையுறைகள்

சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்களுக்கு தற்பாதுகாப்பு கையுறைகள்...



சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்களுக்குத் தற்பாதுகாப்பு கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் - டீசல் விற்பனையக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன. 

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகி எ.வெங்கடேஸ்வர குப்தா சமூக இடைவெளி குறித்தும், வீட்டில் தனித்து இருப்பது பற்றியும் விளக்கிக் கூறினார். பின்னர் அவர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வி. செல்வராஜுவிடம் சங்கப் பணியாளர்கள் 200 பேருக்குத் தற்பாதுகாப்பு கையுறைகளை வழங்கினார்.

கையுறைகளை பெற்றுக்கொண்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கையுறைகளை பயன்படுத்தும் முறைகள் பற்றியும்,  அவசியம் குறித்து விளக்கிக் கூறினார். 

நிகழ்ச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் கே.கே.நடேசன், துணைத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், ரோட்டரி சங்க செயலர் திவாகர், பொருளாளர் கங்காதரன், நிர்வாகிகள் ராமசாமி, தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com