இந்தியாவில் லாவா செல்லிடப்பேசி உற்பத்தி: சீனாவிலிருந்து இடம் மாறுகிறது

செல்லிடப்பேசித் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம், தன்னுடைய செயல்பாடுகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றிக்கொள்வதென முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் லாவா செல்லிடப்பேசி உற்பத்தி: சீனாவிலிருந்து இடம் மாறுகிறது

செல்லிடப்பேசித் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம், தன்னுடைய செயல்பாடுகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றிக்கொள்வதென முடிவு செய்துள்ளது.

இந்திய அரசின் புதிய கொள்கை அறிவிப்புகளைத் தொடர்ந்து, இந்த முடிவையெடுத்துள்ளதாக லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், செல்லிடப்பேசி வடிவமைப்பு மற்றும் தயாரிப்புத் துறையில் இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 800 கோடியை முதலீடு செய்யவும் லாவா முடிவு செய்துள்ளது.

சீனாவில் வடிவமைப்புப் பிரிவில் தற்போது 600-650 தொழிலாளர்கள் இருக்கின்றனர். தற்போது இந்தப் பிரிவின் செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றுகிறோம். இனிமேல் இந்தியாவின் தேவைக்கேற்ப உள்ளூரில் செல்லிடப் பேசிகள் தயாரிக்கப்படும் என்று லாவா இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஹரி ஓம் ராய் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து கணிசமான அளவுக்கு உலகின் பிற நாடுகளுக்கு செல்லிடப்பேசிகளை ஏற்றுமதி செய்வோம், இனி இந்தியாவிலிருந்து ஏற்றுமதிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com