உள்ளாடைகளுடன் பாதுகாப்பு உடை அணிந்து பணிபுரிந்த பெண் செவிலியர்!

ரஷியாவில் மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் வெறும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த நிலையில் பாதுகாப்புக் கவச உடையை அணிந்தவாறு  பெண் செவிலியர் பணிபுரிந்த படம் ஊடகங்களில் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது...
உள்ளாடைகளுடன் பாதுகாப்பு உடை அணிந்து பணிபுரிந்த பெண் செவிலியர்!

ரஷியாவில் மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் வெறும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த நிலையில் பாதுகாப்புக் கவச உடையை அணிந்தவாறு  பெண் செவிலியர் பணிபுரிந்த புகைப்படம் ஊடகங்களில் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் கரோனா பாதிப்பு எதுவுமில்லை என்று கூறிவந்தபோதிலும் தற்போது மிக மோசமான அளவுக்கு ரஷியாவில் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் கரோனா பாதித்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் பணியாற்றுவோர் அனைவரும் பாதுகாப்புக் கவச உடை அணிவது கட்டாயமாக இருக்கிறது.

ஆனால், முழுப் பணி நேரமும் இந்தப் பாதுகாப்பு உடையை அணிந்திருப்பது செங்கல் சூளைக்குள் இருப்பதைப் போல, கடும் வெக்கையாக இருப்பதாக மருத்துவப் பணியாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், ரஷியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஆண்கள் இருக்கும் மருத்துவமனை வார்டில் வெறும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து, மேலே பாதுகாப்புக் கவச உடை அணிந்த நிலையில் ஒரு செவிலியர் பணியாற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

மாஸ்கோவிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவிலுள்ள டூலா நகரிலுள்ள மருத்துவமனையில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக யாரும் புகார் எதுவும் செய்யவில்லை. எனவே, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட செவிலியர் கண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com