கூத்தாநல்லூர்: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை வேதாரண்யக் காட்டில் விடப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, வேதாரண்யம் காட்டில் கொண்டுபோய் விடப்படும் என நகராட்சி ஆணையர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார். சாலைகளில் சுற்றித் திரிய
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, வேதாரண்யம் காட்டில் கொண்டுபோய் விடப்படும் என நகராட்சி ஆணையர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட சாலைகளில் ஆடு, மாடு மற்றும் குதிரை உள்ளிட்ட கால்நடைகளை மேய விடுவதால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறும், விபத்துக்களும் ஏற்படுகிறது. மேலும், தொடர் விபத்துக்களுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. 

இதனால், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப் பிரிவு 240 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டப் பிரிவு 41 ன் படியும், கூத்தாநல்லூர் பகுதியில் கால்நடைகள் வளர்க்கும் 19 உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து ஏற்கெனவே அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூர் நகர எல்லையில், ஆடுகள், மாடுகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள், சாலைகளில் மேய விடாமல் தங்களது இடங்களிலேயே வைத்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

இந்த அறிவிப்பை மீறி கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்தால், அந்தக் கால்நடைகளை நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு, வேதாரண்யம் காட்டில் கொண்டு போய் விடப்படும். மேலும், கால்நடையின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும். 

நகராட்சிக்கு உரிய அபராதத் தொகையை செலுத்திய பிறகே, கால்நடைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஆர்.லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com