அமெரிக்காவில் இணையவழி அமேசான் மருந்து விற்பனை: பங்குகள் விலை சரிவு

அமெரிக்காவில் இணையவழி மருந்துகள் விற்பனையை செவ்வாய்க்கிழமை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது. உடனடி பாதிப்பாகப் புகழ்பெற்ற அமெரிக்க சங்கிலித் தொடர் மருந்து விற்பனை நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்தது
அமெரிக்காவில் இணையவழி அமேசான் மருந்து விற்பனை தொடக்கம்
அமெரிக்காவில் இணையவழி அமேசான் மருந்து விற்பனை தொடக்கம்

அமெரிக்காவில் இணையவழி மருந்துகள் விற்பனையை செவ்வாய்க்கிழமை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, உடனடி பாதிப்பாகப் புகழ்பெற்ற அமெரிக்க சங்கிலித் தொடர் மருந்து விற்பனை நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்தது.

செவ்வாய்க்கிழமை பங்குகள் விற்பனை தொடங்குமுன்னரே, சிவிஎஸ் ஹெல்த் கார்ப்பரேஷனின் பங்குகள் 9 சதவிகிதமும் வால்கிரீன், ரைட் எய்ட் ஆகியவற்றின் பங்குகள் 10 சதவிகிதம் வரையிலும் விலை குறைந்துவிட்டன.

அமேசானில் ஆர்டர் செய்வதன் மூலம் பிற பொருள்களைப் போலவே, இன்சுலின் முதல் இன்ஹேலர் வரை, தங்களுக்குத்  தேவையான மருந்துகளையும் ஓரிரு நாள்களில்   வீட்டுவாசலிலேயே பெற முடியும்.

இணையவழி விற்பனையில் கைதேர்ந்துவிட்ட அமேசான், மருந்து விற்பனையிலும் நுழைவதன் காரணமாக, பிற மருந்து விற்பனை நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

அமேசான் காரணமாக அமெரிக்காவில் பல விற்பனைத் தொழில்கள் முடங்கிப் போனது வரலாறு.

1990-களில் புத்தக விற்பனையை அமேசான் தொடங்கியதையடுத்துப் பெரும்பாலான சங்கிலித் தொடர்  புத்தக விற்பனை நிறுவனங்கள் தொழிலைவிட்டு வெளியேறின அல்லது திவாலாகிவிட்டன.

அமேசானுடைய நுழைவைச் சமாளிக்க, மருந்துகள் தேவைப்படுவோருக்கு உடனுக்குடன் கொண்டுசென்று வழங்குவது போன்ற புதிய முயற்சிகளை சி.வி.எஸ். போன்ற நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com