கரோனா பரிசோதனை: லாஸ் ஏஞ்சலீஸில் வாகன நெரிசல்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்துகொள்வதற்காக கார்களில் மக்கள் திரள்வதால் பெரும் நெரிசல் ஏற்படுகிறது.
லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்ட வாகன நெரிசல்
லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்ட வாகன நெரிசல்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்துகொள்வதற்காக கார்களில் மக்கள் திரள்வதால் பெரும் நெரிசல் ஏற்படுகிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும்  அதிகமாகிவிட்டது.

இந்த நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

மக்கள், தங்கள் கார்களில் இருந்தவாறே பரிசோதனை செய்துகொள்வதற்காகப் பல்வேறு மையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த மையங்களின் மூலம் ஒரு நாளில் 32 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் டாட்கெர்  DODGER விளையாட்டரங்கத்துக்கு வெளியே கரோனா சோதனைக்காக கார்களில் ஏராளமானோர் திரண்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரோனாவின் பெரும் பரவல் காரணமாக பள்ளி திறப்பு போன்ற பல்வேறு திட்டங்களை கலிபோர்னியா மாகாண அரசு நிறுத்திவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com