50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு
By DIN | Published On : 20th April 2021 07:14 PM | Last Updated : 20th April 2021 07:14 PM | அ+அ அ- |

50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளுக்குநாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் தங்களது மொத்த படுக்கைகளின் எண்ணிக்கையில் 50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,986 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.