கோவேக்ஸின் விலை ரூ.200 குறைப்பு

கரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவேக்ஸின் தடுப்பூசியின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.
கோவேக்ஸின் விலை ரூ.200 குறைப்பு

மாநிலங்களுக்கு வழங்கப்படும் கரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவேக்ஸின் தடுப்பூசியின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக பாரத்பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவேக்ஸின் முன்பு ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.400-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை நேற்று (ஏப்.29) ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இன்று கோவேக்ஸின் தடுப்பூசி விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியின் விலை  உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது தடுப்பூசிகளின் விலை அடுத்தடுத்து குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.1,200-ல் மாற்றமில்லை எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களின் வரிப்பணங்களில் தடுப்பூசி ஆராய்ச்சி செய்துவிட்டு தடுப்பூசிக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது குறித்து மத்திய அரசை நேற்று ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com