உலகளவில் கரோனா பாதிப்பு 15 கோடியைத் தாண்டியது: 31.79 லட்சம் பேர் பலி

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15,11,59,892 கோடியைக் கடந்தது. பலி எண்ணிக்கை 31.79 லட்சமாக அதிகரித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15,11,59,892 கோடியைக் கடந்தது. பலி எண்ணிக்கை 31.79 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சா்வதேச அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 15 கோடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8 நிலவரப்படி, 15,11,59,892 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,30,44,068 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 5,89,207 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 2,56,41,574 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 68,13,287 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 1,87,62,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 2,08,330 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

உலக அளவில் 3-ஆவதாக பிரேஸிலில் 1,45,92,886 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4,01,417 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 31,79,925 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com