தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பரிசுத் தொகை

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் பரிசுத் தொகைகளை அறிவித்து வருகின்றன.
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பரிசுத் தொகைகள்
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பரிசுத் தொகைகள்

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் பரிசுத் தொகைகளை அறிவித்து வருகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். 

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இதுதவிர பிசிசிஐ பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகைகளை அறிவித்துள்ள நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடியை அறிவித்துள்ளது.

முன்னதாக ஹரியாணா மாநில அரசு ரூ.6 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com