ஆடி அமாவாசை: வீரராகவ பெருமாள் கோயிலில் வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசை நாளையொட்டி வீரராகவ பெருமாள் கோயிலில் தரிசனம் ரத்து செய்யபட்டுள்ள நிலையிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக குவிந்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில் நுழைவு வாயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் பக்தர்கள்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில் நுழைவு வாயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் பக்தர்கள்.


திருவள்ளூர்: ஆடி அமாவாசை நாளையொட்டி வீரராகவ பெருமாள் கோயிலில் தரிசனம் ரத்து செய்யபட்டுள்ள நிலையிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக குவிந்தனர்.

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இதனால் ஒவ்வொரு மாத ஆடி அமாவாசை நாள்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதோடு, அன்றைய நாளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயில் குளத்தில் நீராடி வழிபாடு செய்வதற்காக முன்னதாகவே வருகை தந்து கோயில் வளாகத்தில் தங்குவர்.

குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரை சாலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்.

எனவே நிகழாண்டில் கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு விதிமுறைகளை பின்பற்றும் நோக்கத்திலும் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், இதையும் மீறி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை நாள் என்பதால், அதற்கு முதல் நாளான சனிக்கிழமை இரவு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கோயில் வளாகம் முன்புறம், குளக்கரை சாலை, பஜார் பகுதி, காய்கறி சந்தை மற்றும் காக்களூர் ஏரிச்சாலை மற்றும் நடைபாதையிலும் இருபுறமும் பக்தர்கள் குவிந்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்.

அரசின் விதிமுறையை மீறி காக்களூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாதாள விநாயகர் கோயில் அருகே நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதையடுத்து வீரராகவ கோயில் நுழைவு வாயிலின் முன்புறம் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். 

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில், காவல் துணைக்கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையில் கிராமிய மற்றும் நகர காவல் நிலைய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, பொதுமக்கள் கூட்டம் சேரவிடாமல் உடனே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com