மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,621 கன அடியாகச் சரிவு
By DIN | Published On : 08th August 2021 08:48 AM | Last Updated : 08th August 2021 08:48 AM | அ+அ அ- |

மேட்டூர் அணை நீர்மட்டம் 76.07 அடியாக சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,621 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 77.26 அடியிலிருந்து 76.07 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,969 கன அடியிலிருந்து 1,621 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 38.15 டி.எம்.சி.யாக இருந்தது.