முதுமலை புலிகள் காப்பகத்தில் சர்வதேச யானைகள் தினம்
By DIN | Published On : 12th August 2021 11:30 AM | Last Updated : 12th August 2021 11:30 AM | அ+அ அ- |

கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படும் யானைகளின் பேருயிரைக் கொண்டாடும் வகையில் இன்று சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விழாவில் யானைகள் அணிவகுத்து நின்று அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது.
யானைகளின் விருப்ப உணவுகளான பழங்கள், தேங்காய், வெல்லம் உள்பட ஊட்டச்சத்து உணவுகளை ருசித்தன.