அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

ஆகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்


சென்னை: அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து பேசி வருகிறார்.  

அதன்படி, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக தமிழர் இடையேயும் தமிழரின் தென் மற்றும் பண்பாடு குறித்த மகத்தான உற்சாகத்தையும், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டியுள்ளன.

இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக, ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். 

கீழடியில் திறந்தெவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். 

தேசிய கடற்சார் நிறுவனம் உதவியுடன், சங்க கால துறைமுகங்கள் அமைந்திருக்கும் இடங்களில் கடல் ஆய்வுகள் நடத்தப்படும்.

கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் ஆகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com