சட்டப்பேரவை நிகழ்வு ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும் 

சட்டப்பேரவையின் நிகழ்வுகளின் ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சட்டப்பேரவை நிகழ்வு ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும் 


சென்னை: சட்டப்பேரவையின் நிகழ்வுகளின் ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும். 

ஆறு மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். 

சட்டப்பேரவை நிகழ்வு ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும்.

பேரவையில் 1921 இல் இருந்த நடைபெற்ற நிகழ்வுகளின் ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.

அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்.

வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.

அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்.

பொது நிலங்களை முறையாக பயன்படுத்த அரசு நிலை மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும். 

அரசு இடங்களை அடையாளம் காண ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன ஆய்வு மேற்கொள்ளப்படும்

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின்கீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com